மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது.

மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து பேருந்து ஏறுவதற்கு முண்டி அடித்து ஓடி வரும்போது வழுக்கி விழுகிறார்கள்.
பலமுறை விபத்துகளும் ஏற்பட்டுள்ளது முறையாக பூங்காவிற்கு தண்ணி உற்றுவார்களா அல்லது ரோட்டில் தண்ணி ஊத்தி செல்வார்களா என்று பயணிகள் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள் தண்ணீரை ரோட்டில் சிந்தி வீணாக்காமல் பூங்காவிற்கு தேவையான அளவில் ஊற்றிவிட்டு செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
