அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி D வினோத் அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை உதகை நகரத்திற்கு உட்பட்ட புது மந்து பகுதியில் BLO அலுவலர் அவர்களுடன் அதிமுக பூத் பொறுப்பாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு படிவத்தினை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை மேற்பார்வையிட்டார்.

உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர இளைஞர் அணி இணை செயலாளர் பிரபு,சிவா, அவைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
