உடுமலை,
நவம்பர் 09.
உடுமலை இந்திராநகர் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
