Headlines

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலையில், துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், தாமிரபரணி ஆற்றில் மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதே திட்டத்தின் கீழ், கடந்த வாரம் மாநர பகுதியில் உள்ள, “கோடக நல்லூர்” தாமிரபரணி ஆற்றில், ஒரு லட்சம் மீன் விரலிகள் இருப்பு செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து இன்று ( நவம்பர்.8) இம்மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள, அரசு மீன் விதைப்பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்ட 30 ஆயிரம் கட்லா மீன் குஞ்சுகளும், 30 ஆயிரம் ரோகு மீன் குஞ்சுகளும், 40 ஆயிரம் செல் கெண்டை மீன் குஞ்சுகளும் என, மொத்தம் ஒரு லட்சம் மீன் விரலிகள், குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், இருப்பு வைக்கப்பட்டன! என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டத்தின் மூலம், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மீட்டெடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், முடியும்.

நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை, தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் ந. சந்திரா, திருநெல்வேலி மண்டல உதவி இயக்குநர் ப.மோகன் ராஜ், நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் மகாலெட்சுமி, திருநெல்வேலி வருவாய் வட்டாட்சியர் சந்திரகாசன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *