உடுமலை:
நவம்பர் 06உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வகையில் ஆங்காங்கே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் மூணார் பஸ்நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை தடுப்புகள் ,மற்றும் விறகுகளை கொட்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் நடைபாதையில் பயணிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதன் காரணமாக பாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் முழுக்க முழுக்க வீணாகி உள்ளது .இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாக முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
