அஞ்சுகிராமம் அருகே டீக்கடையில் நடந்த தாக்குதல் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கணேஷ் டீக்கடையில் நேற்று மாலை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, குமார் சிவலிங்கம் (வயது 50) என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணேஷ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் குமார் என்ற வாடிக்கையாளர் டீ குடிக்க வந்துள்ளார். சிறிது தாமதமாக டீ வழங்கியதை காரணமாகக் கொண்டு, அந்த வாடிக்கையாளர் குமார் சிவலிங்கத்தை இழிவாக “சாம்ப நாயே, பரப்பயலே” என திட்டியுள்ளார்.
அதை பொருட்படுத்தாமல் குமார் சிவலிங்கம் டீயை கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றபோது, மீண்டும் அதே நபர் “சாம்ப நாயே, புண்டா மகனே” என திட்டி, தன் கையில் இருந்த சாவியால் குமார் சிவலிங்கத்தின் தலையில் பலத்த குத்து கொடுத்துள்ளார். இதனால் குமாரின் தலையில் ரத்தம் கசிந்தது.
அதன் பின்னர் அவர் மூக்கிலும் மீண்டும் குத்தியதால் கடுமையான காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்த ஆட்டோ சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணனும் இணைந்து, குமார் சிவலிங்கத்தை வயிற்றில் எட்டி மிதித்து, கழுத்து மற்றும் தலையில் அடித்துள்ளார். இதனால் குமார் மயங்கி விழுந்து கடுமையாக காயமடைந்தார்.
அங்கு இருந்த பொதுமக்கள் குமார் சிவலிங்கத்தை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது அவர் பாரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையினர் தெரிவித்ததாவது:
குமார் சிவலிங்கத்தை தாக்கியவர்கள் குமார் (வாடிக்கையாளர்) மற்றும் கோபாலகிருஷ்ணன் (ஆட்டோ சங்க தலைவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
