தனக்கு வேண்டும் என்பது தேவை!! எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை!!
என்ற கொள்கை மனப்பான்மையோடு தன்னுடைய ஊதியம் கொண்டும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ்.

இஸ்லாமியராக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர மக்களும் பண்டிகை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், நண்பர்களின் உதவியோடு மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கியுள்ளார். மேலும் தீபாவளி அன்று சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் அங்கு மயக்க நிலையில் இருந்த செல்வம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு முதலுதவி செய்து அவருக்கு வேண்டிய உதவியும் செய்து அவருடைய இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
