Headlines

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர்.

“நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான் நம்புகிறேன்.

அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! என, நான் நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன், ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்! என்பதை, நான் நன்கு அறிவேன்.

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்டவிதிகளையும் பின்பற்றுவேன்! என்றும்,
லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்! என்றும், அனைத்து செயல்களையும், நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்துவேன்! என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன்! என்றும், தனிப்பட்ட நடத்தையில், நேர்மையை வெளிப்படுத்துவதிலும், ஒரு முன் உதாரணமாக செயல்படுவேன்! என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை, உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன்! என்றும், நான் உறுதி கூறுகிறேன்!” என்ற உறுதிமொழியை மாவட்ட கண்காணிப்பாளர் வாசிக்க, அதனை பின்பற்றி அனைவரும் அப்படியே கூறி, “உறுதி மொழி” எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *