திருநெல்வேலி,அக்.21:-
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும் சேர்த்து, தூய்மைப் பணியாளர்கள், வீடு-வீடாக சென்று தினசரி சேகரித்து, கொண்டு வரும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, தச்சநல்லூர் மண்டலப் பகுதியில் அமைந்துள்ள, “ராமையன்பட்டி” குப்பைக் கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது.

“தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக,இந்த நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும், இன்று (அக்டோபர். 21) ஒரே நாளில் மட்டும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, கூடுதலாக சுமார் 198.5 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது வழக்கமாக, தூய்மைப் பணியாளரகள், தினசரி சேகரிக்கும் குப்பைகளை விட, 18.5 டன் குப்பைகள் கூடுதல் ஆகும்!”- என, I.A.S. அதிகாரியும், நெல்லை மாநகராட்சியின் ஆணையாளருமான மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
