அக் 16 கன்னியாகுமரி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்களின் நலனுக்காக நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், குறிப்பாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பெரும் திரளானோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பலர் கோஷங்கள் எழுப்பி தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
