அக் 07, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் திரு. அன்பு, இ.வ.ப. அவர்கள் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் திரு. ஸ்ரீவல்சன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படி, வனச்சரக அலுவலர்கள் திரு. இராமு (குலசேகரம்), திரு. முஹைதீன் (களியல்), திரு. கலைமணி (வேளிமலை) ஆகியோர் தலைமையில்,

ஜான் பால் II மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குலசேகரம் வளாகத்தில் 07.10.2025 அன்று மாலை வன உயிரின வார விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பங்குதந்தை திரு. ஜோஸ், தாளாளர் லீனா, பள்ளி முதல்வர் லிட்டி, வன அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கிடையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வனச்சரகர் திரு. இராமு வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, விழா இனிதே நிறைவுற்றது.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
