Headlines

தக்காளி விலை கடும் சரிவு பறிக்க ஆள் இல்லாமல் வயல்களில் வீணாகும் அவலம்.

தக்காளி விலை கடும் சரிவு பறிக்க ஆள் இல்லாமல் வயல்களில் வீணாகும் அவலம்

உடுமலை செப்.29-

உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் நடப்பு சீசனில் தக்காளி விலை சரிவு, பறிக்க ஆட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் சீதோஷன நிலை மாற்றம் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூல் பெருமளவு பாதித்தது. இந்நிலையில் தக்காளி விளையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

உடுமலை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மொத்த சந்தைகளில் 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ 100 முதல் 200 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

உரிய விலை கிடைக்காதது மற்றும் பறிப்பு கூலி போக்குவரத்து கட்டணம் கூட கட்டுபடியாகாததால் விவசாயிகள் செடிகளில் இருந்து தக்காளியை பறிக்காமல் வயல்களிலேயே வீணாகி வருகிறது.

விவசாயிகள் கூறியதாவது:
தக்காளி சாகுபடி ஏக்கருக்கு ரூ 50, ஆயிரம் வரை செலவாகிறது. வழக்கமாக ஏக்கருக்கு ஆயிரம் பெட்டிகள் வரை மகசூல்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *