திண்டுக்கல்லில் காருண்ய வாசல் முகப்பத்தே ரசூல் கமிட்டி சார்பாக மீலாது விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது நபி பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் கழிக்கம்பட்டியில் மீலாது விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் ஹஜ்ரத் அஸ்னஸயது டாக்டர் க்வாஜா முபாரக் மௌலானா வாப்பா தலைமையில் கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கப்பட்டது காருண்யா வாசல் தலைமை இமாம் அப்துல்லா தாவூதி ஹஜ்ரத் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஜலாலுதீன், சுலைமான், முஹம்மது கமாலுதீன், தமீமுல் அன்சாரி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர் காருண்யா வாசல் செயலாளர் ஜெகதீசன் வரவேற்புரை வழங்கினார்.
தலைவர் அப்துல் காதர் முனீரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் முகமது அப்துல் காதர் ஸுஃபி வாழ்த்துரை வழங்கினார் அல் அசரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி நிறுவனர் முதல்வர் முகமது ஹுசைன் மன்பஈ ஹஜ்ரத் சிறப்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயான் ,மழை வேண்டி துவா , தப்ருக்கு வழங்குதல் நடைபெற்றது நிறைவாக காருண்யா வாசல் பொருளாளர் முகமது பாரூக் நன்றியுரை கூறி நிகழ்ச்சி நிறைவு செய்தார் விழாவில் திரளான ஆண் ,பெண் மற்றும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என பாகுபாடு இன்றி அனைத்து சமூகத்தினரும் திரளாக கலந்து கொண்டு வாப்பாவிடம் ஆசி பெற்று சென்றனர்
