அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று தமிழக முதல்வரால் yதுவக்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தபின் கோவையில் இன்று காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூர் காந்தி நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ராஜ்குமார் மற்றும், மாவட்ட ஆட்சியாளர் திரு.பவன்குமார் IAS மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் திருமிகு ரங்கநாயகி, மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் திருமிகு லட்சுமி இளஞ்செல்வி,மற்றும் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் திருமிகு பாக்கியம் ஆகியோருடன் இணைந்து திட்டத்தை துவக்கி வைத்து மழலைச்செல்வங்களுடன் அமர்ந்து மிக அருமையான வெண்பொங்கல்,சாம்பார்,கேசரி யுடன் காலை உணவை உண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்
