Headlines

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆக் 22, கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை மீனவ கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் குடும்பத்தினருடன் பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மீனவர்களின் நலனை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட கூடாது என்று வலியுறுத்தியும், திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *