ஆகஸ்ட் 21, நாகர்கோவில்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகர மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவராக தேர்வான அன்றனி அலெக்ஸுக்கு, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் மற்றும் குமரி பாராளுமன்ற உறுப்பினரான விஜய்வசந்த் எம்.பி நியமனச் சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் மற்றும் மாநில காங்கிரஸ் செயலாளர் எம்.ஜி. ராமசாமி, குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் மற்றும் ஏஐசிசி உறுப்பினர் ஆரோக்கியராஜ், மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சாமுவேல், பியூலா ஜோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் அன்றனி அலெக்ஸுக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் வாழ்த்து தெரிவித்தார்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
