ஆக் 20, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார்.
தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை இன்று அவரது குடும்பத்தினர் சந்தித்து, கண்ணீர் மல்க புகார் மனுவை அளித்தனர். தவறேதும் செய்யாத தனது கணவரை மீட்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருள்ரீகன் நிரபராதி என்பதை நிரூபித்து, உடனடியாக விடுதலை செய்ய அரசுகள் முன்வர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
