இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம் எல் ஏகலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சு நாகலட்சுமி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா.வத்சன். ரா. கலைமணி, ஜெ மனோஜ்குமார், எஸ் பத்ரசாமி, திருக்கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் கோட்டை மேடு பகுதி திமுக பொறுப்பாளர் வி ஐ பதுருதீன் மற்றும் வட்டக்கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை
