Headlines

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கற்பகம் (50). கற்பகம் வீட்டில் வாஷிங் மிஷினில் துணி துவைத்து விட்டு பின்னர் வாஷிங் மெஷினை ஆப் செய்துள்ளார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கற்பகம் தூக்கி வீசிப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் கற்பகத்தை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *