தென்காசி ஆகஸ்ட்
தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொமுச உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சங்க நிர்வாகி ரவீந்திரன் சேர்மலிங்கம் கண்ணன் கருப்பையா எழுதிய ராஜ் ஜெரால்ட் சிவசெயலப்பன் சிவகுருநாதன் முருகையா மணி கிருஷ்ணன் வெங்கடாசலம் வண்ண முத்துக்குமார் சாஸ்தா சபரி ராஜ் மாரியப்பன் சண்முகம் கண்ணன் கருப்பசாமி அருணாச்சலம் சந்திரசேகர் பண்பொழி பேரூராட்சி வார்டு செயலாளர் ஹசன் கனி தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது கபீர் உள்பட ஏராளமான போக்குவரத்து கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
