மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோவன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சம்பந்தமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பொதுமக்களின் குறைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தளபதியாரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தளபதியாரின் தலைமையில் அமையும் என்பதாக தெரிவித்தார்.

