மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு பகுதியில் துணிப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் இல.அமுதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், வழிகாட்டி மணிகண்டன், கிரேசியஸ், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்ச பை விழிப்புணர்வு.
