திருநெல்வேலி,ஜூலை.10:-
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதிமுக மண்டலக் கூட்டம், நேற்று [ஜூலை.9] நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, மதிமுகவினர் நடத்திய, கடுமையான தாக்குதலுக்கு, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” வன்மையான கண்டனத்தை, தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தூண்டுதலின் பேரில் அவருடைய முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன்,வெளியிட்டுள்ள “அறிக்கை” ஒன்றில் கூறியிருப்பதாவது:-
” சாத்தூர் மதிமுக தாக்குதலில், பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் என, மொத்தம் 11 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகீன்றனர். இவர்களுள், லேசான காயமடைந்த 8 பேர், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கடுமையாகத் தாக்கப்பட்ட 3 பத்திரிகையாளர்கள், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை வைகோவும், அவரது கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தடுக்காமல் வேடிக்கை பார்த்த்துக்கொண்டு இருந்தது, வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்! என்று நெல்லை பத்திரிகையாளர் மன்றம், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து, மேடைகளில் முழங்கும் வைகோவின் இந்த இழிசெயல், பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால்! என்றே, நெல்லை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட கட்சியினர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! என்றும், பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களிடம்வைகோவும், அவருடைய கட்சியின் மூத்த நிர்வாகிகளும், வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்! என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பத்திரிகையாளர்கள் பணிப் பாதுகாப்பு சட்டத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து, அதனை முறைப்படி நிறைவேற்றித்தர வேண்டும்! என, அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பிலும், “நெல்லை பத்திரிக்கையாளர் மன்றம்” கேட்டுக்கொண்டு உள்ளது. “இந்த வருத்தமான சம்பவத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” விரைவில் கூடி, ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும்!” என நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆர். வெங்கட சுப்பிரமணியன், உறுதிபட தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
