மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார்.மேலும் கீழே…