திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!
திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…
