திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…
