திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு மனுதாரர் தரப்பு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை; மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என அரசுத் தரப்பு வாதம்.
வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி ஸ்ரீமதி.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
