திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது.
ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும்
அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார்.
இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர் இரண்டு பிரிவுகளாக ஜிஎஸ்டி மாற்றி அமைத்து மறு சீராய்வு செய்து 45 நாட்கள் ஆகின்றன.
இதனால் பெரிய நிறுவனங்களில் விற்பனை அதிக அளவில் நடைபெற்றுள்ளது.
இந்த 45 நாட்களில் தீபாவளி பண்டிகை விற்பனை மட்டுமே சுமார் 6 லட்சம் கோடி மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
தற்போது இந்தியா பொருளாதாரத்தில் உலக நாடுகளில் 4ம் இடம் உள்ளது.
இந்த ஜிஎஸ்டி மறு சீராய்வு காரணமாக உலக நாடுகளில் இந்தியா விரைவில் 3ம், இரண்டாம் இடத்தில் முன்னேற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக முழுவதும் உள்ள தொழில் வல்லுநர் பிரிவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கான விளக்கங்கள் அளித்து வருகிறோம் என்றும் ஜிஎஸ்டி வரி மறு சீராய்வுக்கு பின்னரும் ஒரு சில நிறுவனங்கள் விற்பனை விலையை குறைக்காவிடில் அவர்கள் மீது, கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், தொழில் வல்லுநர்கள் பிரிவு மாநில செயலாளர்கள் உமா நாச்சியார், மகாலட்சுமி, மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமசேகர், உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை தொழில் வல்லுனர் பிரிவு திண்டுக்கல் மாவட்ட தலைவர் அழகுமலை ஏற்பாடு செய்திருந்தார்.
