பொள்ளாச்சி விசுவதித்தி மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்வு சிலம்பம் கொண்டு நடைபெறுகிறது.
சுமார் 222 மாணவர்கள் ஒன்றிணைந்து 50 மணி நேரம் 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் ஜாய் கரிப்பாய் மற்றும் சோழ உலக சாதனை நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் ஆர்த்திகா காளீஸ்வரன் செயலர், உலக சாதனை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் ஆகியோரது முயற்சியில் நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் திரளாக இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி செய்தியாளர் – மனோகரன்.
