கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள அனைத்து கடைகளுக்கும் தமிழக அரசின் ஆணைப்படி பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் துண்டு பிரசுரத்தை அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் தமிழக அரசு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
