திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்
வருவாய் துறையின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் ஆக்கிரமைப்பு இடத்தினை அளவீடு செய்யப்பட்டன.
தொடர்ந்து 35 அடி நீளமுள்ள பாதை ஆக்கிரமப்பிலிருந்து மீட்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.
மேலும் கோதைமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட ஓடையை சீரமைப்பு செய்து தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் கோரிக்கை வைத்து வருகிறார்.
தொடர்ந்து 35 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்ட நிலையில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..