நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.
நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…
