குமரியை அடகு வைத்தாரா தளவாய் சுந்தரம்? அதிமுக – வில் வெடிக்கும் அதிருப்தி எரிமலை!
நாகர்கோவில், மார்ச் 25 : கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தளவாய் சுந்தரம் தனது சுயலாபத்திற்காக கன்னியாகுமரி தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம். ஒட்டுமொத்த மாவட்டத்தையும் ஒருவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கின் உச்சமாகவே இது…
