கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…
