உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர். விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் இயற்கையான ஆரோக்கியமான காய்கறிகள்,…