கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh
