வர்த்தகம்
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.
திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே, திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…
நாகர்கோவில் 39வது வார்டில் சர்ச்சை!பட்டாரியார் நெடுந்தெருவின் பழமையான கருங்கல் சுவர் இடிப்பு – வணிக நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம்?
அக் 18; கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் 39வது வார்டில் பட்டாரியார் நெடுந்தெருவின் நுழைவாயிலில் ஆண்டுகளாக நிலைத்து வந்த பழமையான கருங்கல் மதில் சுவர், சிலரின் சுயநலத்திற்காக இடிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இச்செயல் நடைபெற்றதாக ஆதரவாளர்கள் கூறினாலும், இருபுற சுவர்களும் அல்லாமல் ஒரே பக்க சுவர் அதுவும் வணிக கிடங்கு அருகிலுள்ள பகுதி மட்டும் இடிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வணிக கிடங்கு, 39வது வார்டின்…
பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் நெசவு தொழிலாளர்கள்.
உடுமலை: அக்டோபர் 14. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கினால் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும் பாரம்பரியமாக கைத்தறி நெசவு செய்யும் தங்கள் குடும்பத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நெசவுத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். உடுமலை, வாளவாடி, பூளவாடி, மலையாண்டிபட்டினம், புக்குளம், குரல் குட்டை, உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமான கைத்தறி நெசவில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய் குறைவு, அங்கீகாரம் இல்லாத மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளை…
உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு- குளிர்பதன கிடங்கு ஜாம் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை..
உடுமலை, அக்டோபர் 12- திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காளிசாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். தக்காளி சாகுபடிக்கு தக்காளி நாற்று , உரம் கூலி மற்றும் களை எடுத்தல் உட்பட ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகும் நிலையில் உடுமலை தினசரி சந்தைக்கு தக்காளி பழங்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருந்து தக்காளி பழங்கள் அதிக…
உடுமலைப் பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை.
செப் 09 : உடுமலை உடுமலை பகுதிகளில் அரசாணிக்காய் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழையில்லாததால் மகசூல் குறைந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாத சாகுபடி பயிரான, இக்காய் நாட்டு ரகமாக உள்ளது. கேரளா மற்றும் வட மாநில மக்கள் அதிகளவு உண்ணும் காயாக உள்ளதால், உடுமலையில் விளைவிக்கப்படும், அரசாணிக்காய், உள்ளூர் சந்தை மட்டுமின்றி, கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது….
உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செப் 07. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி மற்றும் இறவை பாசன பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது இப்பகுதிகளில் நாட்டுத் தக்காளி கொடி தக்காளி என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . தக்காளி சாகுபடி செய்ய நிலத்தைப் பதப்படுத்துதல் அளவு அடியுரம் நடவு களை பறித்தல் காய்கறிப் பயிர் பாதுகாப்பு என ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை செலவு பிடித்து வருகிறது….
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை.
செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ ரூ 67. 50 விற்பனையானது.மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் 1.00852.50 கிலோ எடை உள்ள 4,107 தேங்காய்களை 19 வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூபாய் 67 50க்கும்…
புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரிப்பு மீன் இறைச்சி விற்பனை குறைந்தது.
புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது . அதே நேரம் மீன் இறைச்சி, விற்பனை குறைந்துள்ளது. உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை செயல்படுகிறது இங்கு மொத்தம் 86 கடைகள் உள்ளன. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விலை குறைவு என்பதாலும் தரமாகவும் பசுமையாகவும் இருப்பதால் தினசரி மூன்றாயிரம் முதல் 3500 வரையிலான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு…
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.
செப் 30 : உடுமலை உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் பிஏபி பாசன பகுதி மற்றும் அமராவதி பாசன பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப் பாசனம் ஆழ் குழாய் , சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் தென்னை சாகுபடி பரப்பு விரிவடைந்துள்ளது .25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2000 ஆண்டில் உடுமலை…
