திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கழுகரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (47)..
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
தொல் .திருமாவளவன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி ,கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்..
இதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் மண்டல செயலாளர் முருகன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்..
அதன் அடிப்படையில் வெங்கடேசனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..
