Headlines

வீரவாஞ்சிநாதனுக்கு 114 வதுநினைவு அஞ்சலி.

வீரவாஞ்சிநாதனுக்கு 114 வது நினைவு அஞ்சலி

தென்காசி ஜூன் 17.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் 114 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் அங்கு அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் செய்தி தொடர்பு துணை அலுவலர் ராமசுப்பிரமணியன் செங்கோட்டை வருவாய் ஆய்வாளர் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலெட்சுமி மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ் எம் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செங்கோட்டையில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் வெண்கல சிலைக்கு செங்கோட்டை திமுக நகர கழகம் சார்பில் செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலக்ஷ்மி திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ரஹீம் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் காளி கல்யாணி முத்தாலிங்கம் சேட் மணிகண்டன் மாரியப்பன் பாலு அபி முருகன் ஜோதிமணி வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான் ராஜா உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாஞ்சிநாதனின் வாரிசுகளான குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தனர் ஏராளமான சர்வ கட்சியினரும் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.செங்கோட்டை வாஞ்சிநாதன் பிறந்த ஊர் என்பதாலும் இங்கு தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *