தென்காசி மே – 24
தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பதி பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான அருவி புலி அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அனைத்து பகுதிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மே ஜூன் மாதங்களில் தொடங்கப்படும் சீசன் ஆனது தற்போது முன்னதாகவே தொடங்கிய காரணத்தினால்சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் வருத்தத்தில் காணப்படுகின்றனர்.குற்றாலம் சீசனை ஒட்டி அமைக்கப்படும் தற்காலிக கடைகள் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் அரிதாக கிடைக்கக்கூடிய மலை பழங்கள் வகைகள் ஆன மங்குஸ்தான் ரம்டான் மாம்பழ வகைகள் பலா வகைகள் வர தொடங்கியுள்ளன இதனை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்வது வியாபாரிகள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக திட்டமிட்டு காவல்துறை செயல்படுத்தி வருகிறது உள்ளாட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
