புளியம்பாறையில் இருந்து ஆமைக்குளம் கல்லூரிக்கு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே ஓடக்கூடிய நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கிய பின்பும் இன்னும் பணி தொடங்காமல் இருக்கின்றது என்ற காரணத்திற்காக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இன் புளியம்பாறை கிளை செயலாளர் தோழர் சுபைர் அவர்கள் தலைமையில் கட்சி தோழர்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்து.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
