வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடி,மே.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ம.விமலன், நகர துணை செயலாளர் கே.தென்னரசு, நகர அவைத்தலைவர் முஹம்மத் ஜான், நகரமன்ற துணைத்தலைவர் கயாஸ் அஹமத், நகரமன்ற உறுப்பினர்கள் மா.பா.சாரதி, குபேந்திரன், ரஜினிகாந்த், தவுலத் பாஷா, கலைச்செல்வன், இக்பால் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மர்வான்
