திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மக்கள் உரிமைகள் கழகம் மற்றும் ஆயை கயித்தே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை இணைந்து ஆதார் திருத்த முகாம் ஆயக்குடி அத்தா மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனர் அஜ்மத் அலி மக்கள் உரிமைகள் கழக நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதனிடையே இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதார் கார்டு புதுப்பித்தல், முகவரி மாற்றம், குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுத்தல், தொலைபேசி எண் மாற்றம், போன்ற பல சேவைகளை பெற்றனர்.
மேலும் இதில் மக்கள் உரிமைகள் கழக திண்டுக்கல் அமைப்புச் செயலாளர் திருமதி பரிதா ஷேக், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் முகமது, திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ஈஸ்வரி துரைசாமி, ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், காளிமுத்து, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுமக்களிடம் இந்நிகழ்விற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த ஆதார் சேவை வரும் சனிக்கிழமை மக்கள் உரிமைகள் கழகத்தினால் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
