திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும் பழனியை பசுமையாக மாற்றும் நோக்கத்துடன் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழனி நகர் காவல் நிலையத்தில் தேக்கு, வேம்பு, மாதுளை, முருங்கை போன்ற மரக்கன்றுகளை பழனி உட்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழனி காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி, மற்றும் சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி ஆகியோர் இணைந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து துவங்கினர்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பழனி நகர் காவல்துறையினரின் இந்த செயல் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
பழனி செய்தியாளர் நா.ராஜாமணி