Headlines
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற…

Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு – நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு.

நாகர்கோவிலில் அம்பேத்கர், காமராஜர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை நாகர்கோவில் நகரில் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் பெரியார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் டாக்டர் ஷேக் முகமது, குளச்சல் தொகுதி மாவட்ட…

Read More
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பழனி பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

பழனியை அடுத்துள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகலையம்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அங்குள்ள ஐ கோர்ட் பத்திரகாளியம்மன் கோவில் வாடிவாசலில் பாரம்பரிய முறைப்படி காளைகளை அவிழ்த்துவிடப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பெரியகலையம்புத்தூர் ஐ கோர்ட் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது….

Read More
போதைக்கு அடிமையான மகனிடமிருந்து உயிர் உடைமைகளை காப்பாற்றி தரக்கோரி ஓய்வுபெற்ற தம்பதியினர் கலெக்டரிடம் மனு

போதைக்கு அடிமையான மகனிடமிருந்து உயிர் உடைமைகளை காப்பாற்றி தரக்கோரி ஓய்வுபெற்ற தம்பதியினர் கலெக்டரிடம் மனு.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதி ஊர்மெச்சிகுளம், விநாயகர்கோவில் தெருவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் அவரது மனைவி ஓய்வுபெற்ற செவிலியர் பாப்பா ஆகியோர், தங்களது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது பற்றி தம்பதியினர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், தங்களது மகன் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்துக்கும் அடிமையாகி, தினந்தோறும் தங்களை…

Read More
கோவை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

கோவை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு மு. க.ஸ்டாலின் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்கிற திட்டங்களின் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. ரவி சாம் அவர்களுடன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆவாரம்பாளையம் பகுதிகழக பொறுப்பாளர் திரு.மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா…

Read More
விழுப்புரம் நகர காவல் நிலையம்..கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

விழுப்புரம் நகர காவல் நிலையம்..கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பிரபாகரன், திரு.சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் எதிரி விழுப்புரம் அகரம் பேட்டை நடராஜர் என்பவரின் மகன் நிர்மல் குமார் (23) என தெரியவந்தது மேலும் எதிரியிடம் இருந்து சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூபாய் 3000/-…

Read More
விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா..

விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்க 14 ஆம் ஆண்டு விழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ASG திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர் M. வடிவேல் தலைமை தாங்கினார், வட்டார துணைத் தலைவர் ஆ. அருணகிரி, வட்டார இணைச் செயலாளர் A. தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் ந. சூரியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞருமான கு.பா. பழனியப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி…

Read More
தமிழ் நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்..!

தமிழ் நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,…

Read More
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும்…

Read More
தக்கலையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தக்கலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

கன்னியாகுமரி,ஜனவரி 6: தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜனவரி 8, 2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு,…

Read More