திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
திருநெல்வேலி,ஜன. 13:- ஒன்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் தலைமையில், இன்று (ஜனவரி.13) காலையில், “குதூகல பொங்கல் விழா” நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன்,முருகன், பொறியாளர்கள் கணபதிராமன், சாந்திகலா, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர்,முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பொன்குமார் டெல்சி ஒபிலியா, தாய்செல்வி இளங்கோவன், ஜெயா, மகாலெட்சுமி, கவுன்சிலர் மல்லிகா…
