நீலகிரி மாவட்ட உதகையில், ரோகிணி சாலையில் பல்வேறு தங்கும் விடுதிகள், காட்டேஜ் கள் செயல்பட்டு வருகிறது.

இதன் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் வணிக ரீதியான கடைகள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து பெயர் பலைககளிலும் முதலில் தமிழில் எழுத வேண்டும்., அடுத்தது பிற மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று ஆனை உள்ளது.

ஆனால், இதையும் மீறி தமிழ் மொழியே இல்லாமல் மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெயர் பலைககள் வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் வருத்தமாக உள்ளது. உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி வைத்துள்ளனர்.இதை இதுவரை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெயர் பலைககள் தமிழில் எழுத மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
