ஆக் 20, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணக்குடி சாலை வெள்ளாடிச்ச விளை அருகே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சம் நிலவிகிறது.
அந்த பகுதியில் மாடுகள் சாலையில் தடையாக இருந்துகொண்டு இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பெரிய அளவில் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது.
பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத மாநகராட்சியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கோரிக்கை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் பாதுகாப்பை முன்னிலையில் வைத்து, விபத்துகளுக்குப் பிற்பாடு பெரும் இழப்புகள் வராமல் இந்த பிரச்சனையை விரைவாக சீரமைக்குமாறு தண்டனை விதிக்க வேண்டுமென அவற்றின் மனு கூறி உள்ளது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
