உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் 24 முதல் 28 வரை நடைபெற்ற 69 ஆவது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டியில் தமிழகத்திலே முதல்முறையாக பெண்கள் அணியில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப்பதக்கம் வென்ற விழுப்புரம் தங்க மகள் K.பூமிகா சாதனை படைத்துள்ளார்.
மேலும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்று உள்ளது.
17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்கம் மதுமிதா (விழுப்புரம்), சஞ்சனா(சென்னை), முத்அரசி(விழுப்புரம்), ரீனா(விழுப்புரம்). 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரியதர்ஷன்(விழுப்புரம்), அமிர்தீஸ்வரர் (சென்னை) ,மிதுன் (சென்னை), பகத்சிங்(விழுப்புரம்). 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிந்து ஸ்ரீ (விழுப்புரம்), பூமிகா (விழுப்புரம்), மதிவதனி(விழுப்புரம்), ஹரி ஆசினி(விழுப்புரம்). 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரனீத் குமார் (விழுப்புரம்), அகிலன் (விழுப்புரம்), எழிலிசை பொழிலன் (விழுப்புரம்), தீபேஷ் (சென்னை). 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மணி தர்ஷன் (விழுப்புரம்), தரணிதரன் (சென்னை), நந்தகுமார் (விழுப்புரம்), சோனிது (சென்னை).
மேலும் தனிநபர் பிரிவில் அமிர்தேஸ்வர் தரணிதரன் சஞ்சனா மற்றும் தனுஷா தனிநபர் தேர்வில் வெங்கலம் என்று உள்ளனர் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அணி மேலாளர்களுக்கும் தமிழ்நாடு மல்லர் கம்பக் கழக நிறுவனத் தலைவர் அய்யா.உலக துரை, தலைவர் ஜனார்த்தனன், செயலாளர் துரை செந்தில்குமார் ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
