Headlines
மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழுக் கூட்டம் (Anti-Drug Club Meeting) இன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தலைமை தாங்கி, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பி வலியுறுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. நாகராஜன், கல்லூரியின்…

Read More
நாகர்கோவிலில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடக்கம். இயற்கை உரம் 5 கிலோ ரூ.30; தென்னை விளக்குமாறு ரூ.30

நாகர்கோவிலில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடக்கம். இயற்கை உரம் 5 கிலோ ரூ.30; தென்னை விளக்குமாறு ரூ.30

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், ஆசாரிப்பள்ளம் மேற்கு மண்டல அலுவலகத்தில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ஐஸ்வர்யா IAS அவர்களின் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திருமதி. சரோஜா அவர்களின் அறிவுரையின்படியும் இந்த விற்பனை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நுண் உர செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் ‘செழிப்பு இயற்கை உரம்’ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தென்னை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை விளக்குமாறுகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன….

Read More
பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

தமிழக அரசு விவசாய பயன்பாட்டிற்காக குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்கி வருகிறது. இதற்காக விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் போன்ற ஆதாரங்களுடன் பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, டிராக்டர்கள் மூலம் இலவசமாக மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனி அருகே உள்ள அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் சில அதிகாரிகளின் உதவியோடு மண் மாபியாக்கள் சட்டவிரோதமாக மண் கடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த சில…

Read More
திண்டுக்கல் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காகவா அல்லது மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வசதிக்காகவா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காகவா அல்லது மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வசதிக்காகவா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கழிவுநீர் வடிகால், சாலை அமைத்தல், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பணிகள் முறையாக திட்டமிடப்படாமலும், போதிய தரமின்றியும் நிறைவேற்றப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திண்டுக்கல் மாநகராட்சியின் 44-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி முருகன் கோவில் தெருவிலுள்ள 40 அடி சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்த பின்னரும்,…

Read More
பழனியில் உள்ள சண்முகநதி புனித நதியா அல்லது சாக்கடை நதியா பக்தர்கள் கொந்தளிப்பு..

பழனியில் உள்ள சண்முகநதி புனித நதியா அல்லது சாக்கடை நதியா பக்தர்கள் கொந்தளிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக சண்முக நதி பகுதியில் முடி காணிக்கை மண்டபம் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின்பு புனித நீராடுவதற்காக சண்முக நதியை பயன்படுத்தி வருகின்றனர்.. தொடர்ந்து திருக்கோயில் திருவிழா காலங்களில் உடுமலை பொள்ளாச்சி கோயம்புத்தூர் வால்பாறை ஊட்டி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நடைபாதை பக்தர்கள் சண்முக நதியில் தங்கி முடி காணிக்கை செலுத்தி புனித நீராடி வருகின்றனர்.. இந்நிலையில் சண்முக…

Read More
பழனியில் உள்ள சண்முகநதி புனித நதியா அல்லது சாக்கடை நதியா பக்தர்கள் கொந்தளிப்பு..

பழனி அருகே ஆயக்குடியில் உள்ள உள்ள குப்பை கிடங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீரும் தரம் கெட்டுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் பட்டியலின மக்கள் அதிகமாக வாழும் அப்பகுதியில் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில் பலமுறை புகார் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவி நேரில் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து குப்பை…

Read More
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…

Read More
பழனி அருகே அவலம் – சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்; ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பழனி அருகே அவலம் – சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்; ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பழனி: பழனி அருகில் உள்ள மானூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால், குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி டெங்கு, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மானூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் பின்புறம், சாகுல் மளிகை கடைக்கு பின்புள்ள பகுதியில் சாக்கடை கால்வாயில் கடும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மெயின் ரோட்டிலேயே தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம்…

Read More
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்.; சர்வதேச போட்டியில் இரட்டை தங்கம்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்.; சர்வதேச போட்டியில் இரட்டை தங்கம்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்., ஜார்ஜியா நாட்டின் படுமி (Batumi) நகரில் நடைபெற்ற Batumi Open International Wushu Tournament சர்வதேச வுஷூ போட்டியில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட வுஷூ சங்கத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் குங்ஃபூ பள்ளி மாணவியான ரேஷ்மி, Cadets (12–14) Female – Long Weapons பிரிவில் பங்கேற்றார். இதில் Jianshu பிரிவில்…

Read More
பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி, ஆக.9: பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பர மேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவ ணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடி யில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில்…

Read More